கால்நடைகளுக்கு குடிநீர் வசதி

Update: 2023-04-09 14:14 GMT

அந்தியூரில் வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கால்நடை சந்தை நடைபெறும். இதற்கு ஈரோடு மட்டு்மின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் கால்நடைகளை விற்பனைக்காக பிடித்து வருவார்கள். இங்கு கால்நடைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் சந்தைக்கு கால்நடைகளுடன் வருபவர்கள் அவதிப்படுகிறார்கள். தற்போது கோடை காலம் என்பதால் உடனே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்து கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்