மங்களூர் ஒன்றியத்தில் உள்ள சிறுபாக்கம், ஒரங்கூர் உள்பட 30 கிராமங்களில் தொழுதூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.