ஈரோடு பவானி மெயின் ரோட்டில் உள்ள மூலப்பட்டறையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக ரோட்டில் குளம் போல் தேங்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். உடனே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும்.