வீணாகும் குடிநீர்

Update: 2023-03-26 16:05 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் வீரக்கல் புதூர் பேரூராட்சி ராமன் நகர் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. கடந்த 6 மாதமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பசுபதி, மேட்டூர், சேலம்.

மேலும் செய்திகள்