திருநள்ளாறில் திருஞானசம்பந்தர் பூங்கா அருகில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பலஇடங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.