சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரிய ஏரி ஊராட்சியில் சுமார் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டி 2 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனி, தலைவாசல், சேலம்.