தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2022-07-19 14:15 GMT

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே காஜிமார் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சாமியார் சந்தில் மக்கள் பயன்பாட்டிற்காக ஆழ்துளை குழாய் மூலம் மோட்டார் அமைத்து உப்புநீரானது வினியோகிக்கபட்டது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக இந்த குழாயில் தண்ணீர் வருவதில்லை. மேலும் மோட்டாரானது பழுதடைந்து உள்ளது. இதனால் ஏற்படும் நீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்