மாணவிகள் விடுதிக்கு தண்ணீர் வசதி

Update: 2023-01-18 15:54 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள தரைமட்ட தொட்டியில் தண்ணீர் எடுக்க 5 அடி உயரமுள்ள தடுப்பு சுவர் மீது ஏறி குதித்து எடுத்து வருகின்றனர். எனவே மாணவிகள் விடுதிக்கு தண்ணீர் வசதி செய்து தரப்படுமா?

-கிஷோர், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்