கடலூர் ஊராட்சி ஒன்றியம் கோண்டூர் ராஜீவ் காந்தி நகர பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.