புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?

Update: 2023-01-11 16:29 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் மற்றும் தொட்டியின் மேற்புறம் பழுதடைந்து விரிசல் காணப்படுகிறது. எந்நேரமும் இடிந்து விழும் தருவாயில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.

-மாரியப்பன், எர்ரனஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்