கல்லணைக்கால்வாயில் ஆபத்தான குளியல்

Update: 2022-07-18 16:26 GMT
காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தஞ்சை கல்லணைக்கால்வாயில் இருக்கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் கல்லணைக்கால்வாயில் பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக ஆங்காங்கே படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பாலம்,  படித்துறை சுற்றுச்சுவரில் இருந்து தண்ணீருக்குள் குதித்து விளையாடுகின்றனர். குறிப்பாக தஞ்சை புதுஆற்றங்கரை பகுதி கல்லணைக்கால்வாயில் அதிகளவில் இவ்வாறு குளிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள், இளைஞர்கள்,சிறுவர்கள் ஆபத்தான முறையில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்