தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் தொட்டிக்கு மூடி இல்லாமல் கிழிந்த பழைய பேப்பைரை வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரில் அழுக்கு படிந்தும், காக்கைகளின் எச்சங்களுடன் கூடிய குடிநீைர மாணவ-மாணவிகள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
-ஊர்பொதுமக்கள், பூச்சூர், தர்மபுரி.