மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மஞ்சள்ஆற்றின் மூலம் நீர்பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் மஞ்சள் ஆறு தூர்வாரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஆறு முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. மேலும், அடர்ந்து வளர்ந்துள்ள செடி,கொடிகளால் விஷப்பூச்சிள் அதிகளவில் உள்ளது. அதுட்டுமின்றி புதர்மண்டி கிடப்பதால் நீர்பாதை தடைபடுகிறது. இதனால் பாசன பகுதிகளுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மஞ்சள்ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?