பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2022-11-23 17:23 GMT

சேலத்தை அடுத்த வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 5 ரூபாய் நாணையத்தை போட்டு ஒரு குடம் தண்ணீர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பிடித்து கொள்ளலாம் என்ற முறையில் அமைக்கப்பட்டது. ஆனால் பூட்டியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, இரும்பாலை, சேலம்.

மேலும் செய்திகள்