தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்பகவுண்டனஅள்ளி கிருஷ்ணாபுரத்துப்பள்ளம் முதல் இண்டூர் மெயின் ரோடு வரை செல்லும் ஏரி கால்வாயில் ஏரிக்கொட்டாய் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை ஓரம் தேங்கி நிற்கிறது. இதனால் ரோடு பழுதடைந்துள்ளது. எனவே இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கால்வாய் தூர்வாரி ஏரி நீர் செல்வதற்கு வழிவகை செய்யவேண்டும்.
-முத்து, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, தர்மபுரி.