விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கன்னார்பட்டிகாலனி பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியின் மையப்பகுதியில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரே இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது கிணறு குப்பைகள் சூழ்ந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும் கிணற்றின் ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் அதன் அருகில் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே கிணற்றை சுத்தப்படுத்தி வலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.