நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கார்கூடல்பட்டி கிராமத்தில் அட்டைகல்காடு பகுதி உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த பல நாட்களாகவே குடி தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அட்டைகல்காடு பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும்.