கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா காரண்டப்பள்ளி ஊராட்சி சிக்கதிம்மன்தொட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தொட்டி சில நாட்கள் மட்டுமே மக்கள் பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-முருகன், சிக்கதிம்மன்தொட்டி, கிருஷ்ணகிரி.