திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எம்.எஸ். காலனி ஐ.ஓ.பி. நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.