கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனையும் ஒரே இடத்தில் உள்ளன. கடந்த ஒரு மாதமாக கொட்டிய கனமழையால் மருத்துவமனை சுற்றிலும் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாசு, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.