அந்தியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் தொட்டி சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குடிநீர் தொட்டியை அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.