கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள லெட்சுமாங்குடி சாலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலையோரத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கடைவீதி சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும், மழை நின்றபிறகும் ஒரு சில நாட்கள் அதே இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து கொசுக்கடி அதிகமாக உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொது மக்கள், லெட்சுமாங்குடி.