நாகை மாவட்டம், வாய்மேடு போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீர் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.