தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-09 10:36 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண்விநாயகநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் போதிய வடிகால் வசதியில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி தெருக்களில் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்