தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்ரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூச்சூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டியின் குழாய் சேதமடைந்து உடைந்து சரிசெய்யப்படாமல் அப்படியே காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-பூபாலன், பூச்சூர், தர்மபுரி.