சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2022-10-30 16:33 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரி தாலுகா பானாபுரம் கிராமத்தில் தைலகவுண்டன் வளைவில் குடிநீர் குழாய் (அடிபம்பு) சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சேகர், மேச்சேரி, சேலம்.

மேலும் செய்திகள்