கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மல்லப்பாடி ஊராட்சியில் கரிய கவுண்டர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது அவற்றின் தூண்கள் சேதமடைந்து உள்ளது. மேலும் நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் ஏணியின் படிகளும் துருப்பிடித்து விழுந்து விட்டதால் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.