பயன்படாத குடிநீர் குழாய்

Update: 2022-10-26 16:16 GMT

சேலம் ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் லட்சுமி நகர், நாடார் தெரு ஆகிய வீதிகளில் பொதுமக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இரும்பு குடிநீர் குழாய் அமைக்க பணிகள் நடந்தது. இந்தநிலையில் குடிநீர் குழாய் அமைத்து 8 மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இதனால் இரும்பு குழாய் துருப்பிடித்து காணப்படுகிறது. மேலும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்