விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள குடிநீர் தொட்டி சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் போதிய குடிநீர் வசதி இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே இந்த பகுதியில் மீண்டும் குடிநீர் தொட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.