சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் சர்ச் எதிரே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டே இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.