மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த தண்ணீாில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.