தர்மபுரி மாவட்டம் கடத்தூர் புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் 15 -வது நிதி குழு மானிய நிதியில் இருந்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அமைக்கப்படும் குடிநீர் குழாய்கள் தரமற்ற முறையில் அமைக்கப்படுகிறது. இதனால் குடிநீர் குழாய்கள் அமைத்த சில நாட்களிலேயே சேதமடைகிறது. எனவே தரமான முறையில் குடிநீர் குழாய்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனிவேல், தர்மபுரி.