கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் செல்லும் நீரோடையை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். சிலர் இந்த நீரோடைக்குள் வாகனங்களை நிறுத்தி கழுவி வருகின்றனர். இதனால் நீரோடையில் ஆயில் கலந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நீரோடை மாசுபடாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.