தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கொட்டாய்கூர்க்காம்பட்டி முருகன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-அஜித்குமார், ஏரியூர், தர்மபுரி.