தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம், கடைவீதி மற்றும் வங்கிகள் அமைந்துள்ள மிக முக்கியமான பகுதியில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்தது. ஆனால் இதுவரை அந்த மோட்டார் சரி செய்யாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மலர், ஏரியூர், தர்மபுரி.