தர்மபுரி மாவட்டம் செம்மாண்டகுப்பம் கிராமத்தில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஊரின் நடுவில் குளம் போல் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கதிர், தர்மபுரி.