தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த பொது குடிநீர் தொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-சிவா, மஞ்சாரஅள்ளி, தர்மபுரி.