தெருவில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-09 14:35 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வ.உ.சி.தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மேலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்