சேலம் பழைய சூரமங்கலம் நேரு தெருவில் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி உடைந்து பல மாதங்களாக தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகினறனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் தொட்டி அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வேல்முருகன், பழையசூரமங்கலம், சேலம்.