தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருமத்தூர் அருகே கொல்லாபுரி அம்மன் கோவில் எதிரே நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வெளியேறி கொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்த், இருமத்தூர், தர்மபுரி.