வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-15 11:06 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கோவிலான் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் வாய்க்காலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுவதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக வாய்க்கால் மாறி வருகிறது. இவை வாய்க்காலில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலான் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்