கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சந்திரப்பட்டி ஊராட்சி சந்திரப்பட்டியில் இருந்து கல்லாவி செல்லும் சாலை அருகில் 2 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளன. இதில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக விவசாய கிணற்றுக்கு அலையும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரமோகன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.