நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். ரெயில்வே நுழைவு சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் சிதறி அடிக்கப்படுவதால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகேஷ், பள்ளிபாளையம், நாமக்கல்.