ஓசூர் மாநகராட்சியில் அரசனட்டி பாரதிநகர் 2-வது குறுக்கு தெருவில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்க கடந்த 30 நாட்களுக்கு முன்பு சாலை தோண்டப்பட்டது. அப்போது துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இதுநாள் வரை சரிசெய்யப்படவில்லை. மேலும் சாலையிலும் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்து சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வி.இராஜேந்திரன், ஓசூர்.