தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மோதுகுலஅள்ளி ஊராட்சி முருக்கம்பட்டி கிராமம் அருந்ததியர் காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அந்த ஆழ்துளை கிணற்றின் குழாய்கள் பழுதடைந்தும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் இன்றி வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவகுமார், முக்கம்பட்டி, தர்மபுரி.