குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-09-27 15:47 GMT

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் தாலுகா டி.அய்யம்பட்டி கிராமத்தில் விநாயகர் நகர் மேல் கூட்ரோடு அருகில் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கும் மேல் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 1 கி.மீ. தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?

-சிவா, தர்மபுரி.

மேலும் செய்திகள்