தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாளநத்தம் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும்.
-ஏழுமலை, தாளநத்தம், தர்மபுரி.