குடிநீர் வசதி தேவை

Update: 2022-09-24 17:41 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் பி.நல்லாகவுண்டம்பட்டி செட்டியார் கடை பஸ் நிறுத்தத்தில் உள்ளது புதுகாலனி. இந்த பகுதி பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த மின்மோட்டார் பழுதானது. இதனால் அந்த பகுதியினர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து மின்மோட்டரை சரிசெய்து தரவேண்டும்.

-காவேரி, புதுகாலனி, சேலம்.

மேலும் செய்திகள்