பயன்படாத குடிநீர் தொட்டி

Update: 2022-09-24 17:31 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் நமாண்டஅள்ளி கிராமத்தில் மழலையர் பள்ளி முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டியின் குழாய்கள் சேதமடைந்தும், மின் மோட்டார் பழுதடைந்தும் பயன்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைத்து, மின் மோட்டாரின் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்வார்களா?

-பிரவீண், நாமண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்