மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி-பூம்புகார் சாலையை இணைக்கும் வகையில் மன்னம்பந்ததில் உள்ள தனியார் கல்லூரி அருகே இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக இணைப்பு சாலையில் ஒரு புறம் தார் சாலையாகவும், மற்றொரு புறம் ஜல்லிக்கற்கள் மட்டும் போடப்பட்டுள்ள சாலையாகவும் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும்,குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முழுமையாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
===